The Sweet Sound of Tamil is Beyond Words
“The Sweet Sound of Tamil” has been renamed to "Beyond Words". We have moved the introduction page for the documentary here.
As we traveled across South and Southeast Asia interviewing people for the film, we captured a lot more than beautiful Tamil dialects. We heard intimate stories of struggle and triumph, as well as stories about Tamil culture and beliefs. The title change for the documentary reflects this amazing content.
இந்தியா, இலங்கை, மலேசியாவில் இருக்கின்ற மக்கள் சொல்கின்ற கதைகள் மூலமாக பேச்சுத் தமிழின் அழகை இந்த ஆவணப்படம் எடுத்துக்காட்டுகிறது.
தமிழ் பல ஆண்டுகளுக்கும் மேலான இலக்கிய பாரம்பரியம் கொண்ட ஒரு செம்மொழி. இன்று உலகத்தில் 8 கோடி மக்கள் தமிழ் மொழியை பேசுகிறார்கள். நாம் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா என்று பயணம் போனால் அங்கங்கே இருக்கின்ற தமிழ் மக்களுடைய பண்பாட்டையும், அந்தந்த மண் வாசனையும் வெளிப்படுத்துகின்ற அழகான ஒரு பேச்சுத் தமிழை (வட்டார மொழியை) நாம் கேட்கலாம்.
வட்டார மொழிகளும் வட்டார வார்த்தைகளும் நம் தினசரி வாழ்கையிலே குறைந்துக் கொண்டே வருகின்றன. இந்த வாழையடி வாழையாக வந்த வட்டார மொழியுடைய எதிர்காலம் நம் கையில் தான் இருக்கிறது. இந்த வட்டார மொழி என்கின்ற பொக்கிஷத்தை வீட்டில் பேசி, நாட்டில் பேசி நாம் தான் காப்பாற்ற வேண்டும்.